Home கட்டுரைகள் தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு!

தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு!

by THFiAdmin
0 comment

சமணரின் தமிழ் தொண்டு!

தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் (சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழிலேயே புதியன படைத்தார்கள். அவர்கள் ஆற்றிய தொண்டு நான்கு வகைப்பட்டது.

1. இலக்கணத் தொண்டு
2. இலக்கியத் தொண்டு
3. அற இலக்கியத் தொண்டு
4. உரைத் தொண்டு

என்று உரைப்பார் பேரா. க.ப.அறவாணன் அவர்கள்.

திராவிட மொழியின் அரும் பெருமையை உலகிற்கு எடுத்து இயம்பிய கால்டுவெல் துரை மகனார் தம் நூலில் “சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கியது, அரசியிலில் அன்று; கல்வித் துறையிலும், அறிவுத் துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம்” எனப் போற்றியுள்ளார்.

இவர்கள் இவ்வாறு கூற என்ன காரணம்? அதற்கு என்ன ஆதாரம்? அதையும் இங்கு சிறிதுப் பார்ப்போம்.

தமிழ்ச் சமணர்கள் தொடாத இலக்கிய வகைகளே இல்லை எனலாம். கீழ்வருவனவற்றைப் பார்த்தாலே உண்மை விளங்கும்.

சமணர்கள் அருளிய தமிழ் இலக்கியங்கள் : காவியங்கள், புராணங்கள்

1. சிலப்பதிகாரம்
2. சீவகசிந்தாமணி
3. நரி விருத்தம்
4. சூளாமணி
5. பெருங்கதை
6. *வளையாபதி
7. மேருமந்திரபுராணம்
8. *நாரதர் சரிதம்
9. உதயணகுமார காவியம்
10. நாககுமார காவியம்
11. கலிங்கத்துப் பரணி
12. யசோதர காவியம்
13. *இராமகதை (ஜைன இராமாயணம்)
14. *கிளி விருத்தம்
15. *எலி விருத்தம்
16. *இளந்திரையம்
17. *புராண சாகரம்
18. *அமிர்தபதி
19. *மல்லிநாதர் புராணம்
20. *பிங்கல சரிதை
21. *வாமன சரிதை
22. *வர்த்தமானம்

சமணர்கள் அருளிய இலக்கண நூல்கள்:

23. தொல்காப்பியம்
24. நன்னூல்
25. நம்பியகப் பொருள்
26. யாப்பருங்கலம்
27. யாப்பருங்கலக்காரிகை
28. நேமிநாதம்
29. அவிநயம்
30. வெண்பாப்பாட்டியல்
31. *சந்த நூல்
32. *இந்திரகாளியம்
33. *அணியியல்
34. *வாய்ப்பியம்
35. *மொழிவரி
36. *கடியநன்னியம்
37. *காக்கைப்பாடினியம்
38. *சங்கயாப்பு
39. *செய்யுளியல்
40. *நத்தத்தம்
41. *தக்காணியம்
42. *பேரகத்தியம்

சமணர்கள் அருளிய அற நூல்கள்:

43. திருக்குறள்
44. நாலடியார்
45. பழமொழி நானூறு
46. ஏலாதி
47. சிறுபஞ்சமூலம்
48. திணைமாலை நூற்றைம்பது
49. ஆசாரக் கோவை
50. அறநெறிச் சாரம்
51. அருங்கலச் செப்பு
52. ஜீவ சம்போதனை
53. அகத்தில் சூடி
54. நாண்மணிக்கடிகை
55. இன்னா நாற்பது
56. இனியவை நாறபது
57. திரிகடுகம்
58. கல்வி ஒழுக்கம்

சமணர்கள் அருளிய தர்க்க நூல்கள்:

59. நீலகேசி
60. *பிங்கலகேசி
61. *அஞ்சனகேசி
62. தத்துவ தரிசனம்

சமணர்கள் அருளிய இசை நூல்கள்:

63. *பெருங்குருகு
64. *பெருநாரை
65. *செயிற்றியம்
66. *பரதசேனாதிபதியம்
67. *சயந்தம்
68. *இசைத்தமிழ்ச் செய்யுட்கோவை
69. *இசைநுணுக்கம்
70. *சிற்றிசை
71. *பேரிசை

சமணர்கள் அருளிய பிற இலக்கிய வகைகள்: (நிகண்டு, ஓவியம், சோதிடம், பிரபந்தம், சதகம், கணிதம் மற்றும் நாடகம்)

72. திருக்கலம்பகம்
73. தோத்திரத்திரட்டு
74. திருநூற்றந்தாதி
75. திருவெம்பாவை
76. திருப்பாமாலை
77. திருப்புகழ்
78. ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
79. அப்பாண்டைநாதர் உலா
80. திருமேற்றிசையந்தாதி
81. *தர்மதேவியந்தாதி
82. திருநாதர் குன்றத்துப் பதிகம்
83. மயிலாப்பூர் பத்து
84. திருமயிலைப் பத்து
85. கொங்கு மண்டல சதகம்
86. நேமிநாத சதகம்
87. சூடாமணி நிகண்டு
88. திவாகரம்(சேந்தன் திவாகரம்)
89. பிங்கலாந்தை(பிங்கல நிகண்டு)
90. கெட்டிஎண் சுவடி
91. *கணக்கதிகாரம்
92. நல்லிலக்க வாய்ப்பாடு
93. சிறுகுழி வாய்ப்பாடு
94. *கீழ்வாய் இலக்கம்
95. *பெருக்கல் வாய்ப்பாடு
96. *அவினந்தமாலை
97. ஜினேந்திரமாலை
98. *உள்ளமுடையான்
99. *பார்சுவநாத மாலை
100. *ஓவிய நூல்
101. *கலைகோட்டுத்தண்டம்
102. *அமுதசாகரம்
103. வச்சணந்திமாலை
104. *குணா நூல்
105. *அகத்தியம்
106. *கூத்தநூல் சந்தம்
107. *பத்மாவதிதேவியந்தாதி

* குறியிட்ட நூற்கள் மறைந்தொழிந்தன.

உரையாசிரியர்களின் உரையின் மூலம் அறியப்பட்ட நூற்கள் தான் மேலே
கூறப்பட்டவை. இதில் சில நூற்கள் விடுப்பட்டுள்ளன. நா.கணேசனாரை கேட்டால் இன்னும் தகவல்கள் கொடுப்பார்.

மேற்சொன்ன தகவல்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு, வெளியிடப்பட்ட “தமிழரசு” (1.11.1974, தீபாவளி சிறப்பிதழ்) என்னும் பத்திரிகையில் இருந்து எடுத்து இங்கு தரப்பட்டுள்ளன.

இதனால் சமணரின் தமிழ்த் தொண்டு எத்தணை பெரியது, பரந்துப்பட்டது என்பது புலப்படும்.

இரா.பானுகுமார்,
சென்னை.

You may also like

Leave a Comment