Home கட்டுரைகள் ஜைன நூற்களில் இறை வணக்கம்

ஜைன நூற்களில் இறை வணக்கம்

by THFiAdmin
0 comment

திருக்குறள்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அருங்கலச் செப்பு:

குற்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம்
பற்ற வுரைத்தா னிறை.

நீலகேசி:

நல்லான் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயரின்பமாக்கும்
செல்லான் தருமச் சுடரான் எனுந் தொன்மையினா
னெல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி.

சூடாமணி நிகண்டு:

கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம்
இடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்க ளின்மை
அடைவிலா வாயுவின்மை அந்த ராயங்க ளின்மை
உடையவன் யாவன் மற்றிவ் வுலகினுக் கிறைவனாமே.

சூளாமணி:

வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்.

நாலடியார்:

வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்துமெம் உள்ளது
முன்னி யவைமுடிக என்று.

நேமிநாதம்:

பூவின்மேல் வந்தருளும் புங்கவன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி – மேவுமுடி
பெல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து.

யாப்பருங்கலக் காரிகை:

கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இனையடி ஏத்தி எழுத்தசைசீர்
பந்தம் அடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே.

சிறுபஞ்சமூலம்:

முழுது உணர்ந்து மூன்று ஒழித்து மூவாதான் பாதம்
பழுது இன்றி ஆற்றப் பணிந்து முழுது ஏத்தி
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா
வெண்பா உரைப்பன் சில.

ஏலாதி:

அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் – பெறுநால்
மறைபுரிந்து வாழமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு.

சிலப்பதிகாரம்:

திங்கள் மூன்று அடுக்கிய திருமுக்குடைக் கீழ்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதை தாழ்பிண்டிக் கொழநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி.

அறநெறிச்சாரம்:

தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை – நாவின்
துதித்து ஈண்டற நெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து.

சீவக சிந்தாமணி:

மூவா முதலா, உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்,
தாவாத இன்பம், தலை ஆயது தன்னின் எய்தி,
ஓவாது நின்ற குணத்து, ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன், அவன் சேவடி சேர்தும் அன்றே!

வளையாபதி

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல் அறி வன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்

யசோதர காவியம்

உலக மூன்று மொருங்குணர் கேவலத்
தலகி லாத வனந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்

நரிவிருத்தம்

பால்நிலா மதியம் மூன்று பல்மணி மிடைந்த பாங்காய்
மேல்நிலா விரித்த போலும் விளங்கும் முக்குடையின் நீழல்
தேன்அவாம் குளிர்கொள் பிண்டிச் செல்வன் சேவடியை வாழ்த்தி
ஊன்அவாம் நரியி னார்தம் உரைசிறிது உரைக்கல் உற்றேன்

திருவெம்பாவை

மூவா முதல்வன் உலகம் முழுதுணர்ந்த
தேவாதி தேவன் திருநாமம் யாம்பாடப்
பாவாய் நீ கேட்டிலையோ பைங்கண் துயிலுதியோ
பூவாரும் மென்கழல்கள் போற்றிய பொங்கொலி போய்த்
தேவாயில் கேட்டலுமே தேர்ந்து நெஞ்சு சோர்ந்து அயர்ந்து
பூவார் அமளிப் புலம்பப் புரண்டு இங்ஙன்
ஓவா மனத்தின் உணர்விலா ஓவியம்போல்
ஆவாய் என் தோழி பரிசு ஏலோர் எம்பாவாய்

திருநூற்றந்தாதி

மறமே முனிந்து மயிலா புரிநின்று மன்னுயிர்கட்
கறமே பொழியு மருட் கொண்ட லேயத ரஞ்சிவந்த
நிறமே கரியவொண் மாணிக்க மேநெடு நாளொழித்துப்
புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே

நன்னூல்

பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே

முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை
அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே

வளரும்….

இரா.பானுகுமார்,
சென்னை.

You may also like

Leave a Comment