கருங்காலக்குடி..
மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இது. இந்த ஊரின் வடக்கே உள்ள மலைப்பகுதியில் பஞ்சபாண்டவர் குன்று எனும் குன்று ஒன்றுள்ளது. குகைப்பகுதியின் வடப்புறம் சமணத்துறவி ஒருவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற கி.பி.9-10ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இச்சிற்பத்தின் கீழ் செதுக்கப்பட்டுள்ளது.
இது சமண முனிவர்கள் பள்ளி அமைத்து தங்கியிருந்த ஒரு பகுதி. இங்கு 30 கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய அறப்பள்ளி இருந்ததைக் குறிக்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டு காணப்படுகின்றது.
இதன் மலைப்பகுதியில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்தமைக்குச் சான்றாக பாறை ஓவியங்களும் குறியீடுகளும் உள்ளன. இவர்றின் காலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளாக இருக்கலாம் என றியப்படுகின்றது. பாறைகள் சூழ்ந்த இப்பகுதி, ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமணர்கள் பள்ளி அமைத்து வாழ்ந்தமைக்குச் சான்றாகவும் அமைகின்றது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2018/01/blog-post.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=c98xApHTfQQ&feature=youtu.be
இப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி ஆகியோருக்கும் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
1 comment
Mayan was first people to land in USA, mayan was specking , Mayan language was almost Tamil,- for example,- Ka=?w, ,= Kawal(tam),= Defences/ Police(Eng), 2- Manik(may),=Manik(Sin),=Manik kal(Tam),= Jem(Eng), 3- Appan/Chaitan(maya);=Chaitan(Malla),= Appan (tam), Lot more,-